”நா பாட்டுக்கு செவனேனுதான இருந்தே…………….!” : லைகாவை சிக்கலில் விட்ட பார்த்திபன்!

”நா பாட்டுக்கு செவனேனுதான இருந்தே…………….!” : லைகாவை சிக்கலில் விட்ட பார்த்திபன்!
  • PublishedMay 17, 2023

பிரமாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில். தற்போது லைகா நிறுவனத்திலை் அமலாக்கத்துறையின் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நடவடிக்கைக்கு நடிகர் பார்த்திபன் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. அதாவது,  பொன்னியின் செல்வன் விழாவில் பார்த்திபன் பேசியது தான் இப்போது பிரச்சனையை உண்டாக்கி உள்ளது.

பார்திபன் பேசும்போது, ஆயிரம் கோடிக்கு ரெய்டு செய்ய வேண்டும் என்றால் பொன்னியின் செல்வன் திரையரங்குகளுக்கு போனால் கண்டிப்பாக கிடைக்கும் என  வேடிக்கையாக பேசி இருந்தார்.

ஏனென்றால் படம் நன்றாக இருப்பதால் மக்கள் கூட்டம் அதிகரிக்கும்இ இதனால் வசூலும் பல கோடி அள்ளும் என்பதை சூசகமாக பார்த்திபன் பேசி இருந்தார்.

ஆனால் இப்போது லைக்கா நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பெரிய நிறுவனங்களும் இப்போது பதட்டத்தில் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் மேடையில் பார்த்திபன் பேசிய வீடியோவை இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *