“வச்சிட்டாய்ங்கடா ஆப்பு….” வடிவேல் குறித்து வெளியான சர்ச்சை – கொதிக்கும் ரசிகர்கள்

“வச்சிட்டாய்ங்கடா ஆப்பு….” வடிவேல் குறித்து வெளியான சர்ச்சை – கொதிக்கும் ரசிகர்கள்
  • PublishedMay 17, 2023

சினிமா மூத்த பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன், யூடியூப் சேனல் ஒன்றில் வடிவேலு குறித்து பேசி உள்ளார்.

அதில், நடிகர் வடிவேலு ஆரம்பத்தில் பிரேம் போடும் கடையில் வேலை பார்த்து வந்தார். ஒரு வேலைசாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு வந்த வடிவேலு, நண்பரின் உதவியுடன் ராஜ்கிரண் அலுவலகத்தில் எடுபுடியாக வேலை செய்தார்.

கிராமத்து டான்ஸ் ஆடுவதில் கெட்டிக்காரரான வடிவேலுவை, ராஜ்கிரண் என் ராஜாவின் மனசிலே படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

அதன் பின் தேவர்மகன் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் அவருக்கு கிடைத்தது. இப்படி தனது திறமையால் படிப்படியாக முன்னுக்கு வந்தவர் தான் வடிவேலு.

ரசிகர்களின் மனநிலையை நன்றாக புரிந்து வைத்துக்கொண்டவர் வடிவேலு. பாட்டு, டான்ஸ் என அனைத்திலும் கலக்கிய வடிவேலு முதல் முதலில் இளையராஜாவின் இசையில் பாடினார்.

வடிவேலு நட்சத்திர நடிகராக மாறிய பிறகு தனது ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு நடிகையை சிபாரிசு செய்தார் வடிவேலு. அதே போல சந்திரமுகி படத்தில் தனக்கு ஜோடியாக சொர்ணா மேத்தீவ் வேண்டும் என்று பி வாசுவிடம் கோரிக்கை வைத்தார்.

அதேபோல, சோனாவை குசேலன் படத்தில் நடிக்க வைத்தார். அதன்பிறகு அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன.

அதேபோல பல படங்களில் கதாநாயகியாக நடித்த அம்பிகா,மார்க்கெட் இல்லாததால், வடிவேலுவிடம் கெஞ்சி கேட்டு படவாய்ப்பை பெற்றார். இதனால் இருவர் குறித்தும் கிசுகிசு எழுந்தது. இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை.

அதே போல கோவை சரளா, மின்னல் தீபா, அதே போல டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயாவும் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதற்கு பல லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டது.

அதே போல இரவு 8மணிக்கு மேல் படப்பிடிப்பு நடந்தால், இதுக்கு மேல போதும் நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளப்பி நேராக ஈசிஆரில் உள்ள பண்ணை வீட்டுக்கு தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகைகளை உடன் அழைத்துக்கொண்டு சென்றுவிடுவார் என, வடிவேலு குறித்து கடுமையாக விமர்சனங்களை கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன்.

இதைப்பார்த்த வடிவேலுவின் ரசிகர்கள் பயில்வானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *