“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” வாரிசை ஹீரோவாக்கிய தனுஷ்

“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” வாரிசை ஹீரோவாக்கிய தனுஷ்
  • PublishedDecember 25, 2023

நடிகர் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்கி, நடித்து முடித்து இருக்கிறார். ராயன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யாவும் கைகோர்த்து இருந்தார்.

அதன் அப்டேட் வெளி வருவதற்குள்ளேயே தனுஷ் ஒரு அழகான காதல் கதையை இயக்கப் போகிறார்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி இருக்கிறது. தனுஷின் குரலில் வருவதும் காதல், போவதும் காதல் என்று ஒரு சின்ன கிளிப்பிங் வீடியோ ஆரம்பிக்கிறது.

தனுஷ் இயக்குனராக மட்டுமல்லாமல் இந்த படத்தின் மூலம் நீண்ட வருடங்களுக்கு பிறகு தயாரிப்பாளராக மீண்டும் தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார்.

வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தனுஷ் உடைய அப்பா மற்றும் அம்மா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் தனுஷ் தன்னுடைய அக்கா மகனை ஹீரோவாக அறிமுகமாக்குகிறார்.

என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் போன்ற படங்களில் நடிகர் அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் ஆகியோர் இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்கள்.

மேலும் நடிகர் சரத்குமாரும் இதில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். தனுஷ் இயக்கும் தன்னுடைய மூன்றாவது படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என டைட்டில் வைத்திருக்கிறார்.

நடிகர் தனுஷின் குரலில் பாடலை கேட்க தனியாக ஒரு ரசிகர்கள் கூட்டமே உண்டு. பிபி ஸ்ரீனிவாசன் குரலில் கேட்ட நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற பாடலின் வரியை மோஷன் போஸ்டர் வெளியிட்ட வீடியோவில் தனுஷ் பாடியும் இருக்கிறார்.

இது இன்றைய கால காதலை அழகாக சொல்லும் கதை என்பது நன்றாக தெரிகிறது. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *