100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் கேப்டன் மில்லர்..?
2024ம் ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக கேப்டன் மில்லர், அயலான், மிஸன், மெர்ரி கிறிஸ்துமஸ் படங்கள் வெளியாகின. இதில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், சிவகர்த்திகேயனின் அயலான் படங்கள் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12ம் தேதி வெளியானது. அதேபோல், சிவகார்த்திகேயனின் அயலான் கேப்டன் மில்லருக்குப் போட்டியாக ஜனவரி 12ம் தேதி ரிலீஸானது. தனுஷ் – சிவகார்த்திகேயன் படங்கள் ஒரேநாளில் நேருக்கு நேர் மோதியதால் பாக்ஸ் ஆபிஸிலும் செம்ம ஹைப் இருந்தது.
முதல் நாளில் கேப்டன் மில்லர் 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் கேப்டன் மில்லர் கலெக்ஷன் குறைந்ததாக சொல்லப்பட்டது.
நெகட்டிவான விமர்சனங்கள் தான் இதற்கு காரணம் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகின. அதேநேரம் அயலான் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
அதன்படி இதுவரை அயலான் மொத்தம் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால், கேப்டன் மில்லர் வசூல் பற்றி இதுவரை அபிஸியலாக படக்குழு அறிவிக்கவில்லை. அதேநேரம் இன்று முதல் கேப்டன் மில்லர் திரைப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியானது. இந்நிலையில் கேப்டன் மில்லர் இதுவரை 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.