மகனை வைத்து ஒரு படத்தையே எடுத்து முடித்த தனுஷ்… கோலிவுட்டில் அறிமுகமாகும் யாத்ரா

மகனை வைத்து ஒரு படத்தையே எடுத்து முடித்த தனுஷ்… கோலிவுட்டில் அறிமுகமாகும் யாத்ரா
  • PublishedMarch 2, 2024

நடிகர் தனுஷ் தன்னுடைய மூத்த மகன் யாத்ராவை சினிமாவில் அறிமுகப்படுத்தி அவரை வைத்து சைலண்டாக ஒரு படத்தையே எடுத்து முடித்து விட்டார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் தற்போது நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என செம்ம பிசியாக வேலை செய்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது டி51 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர இவர் நடிப்பில் இளையராஜா பயோபிக் படமொன்றும் உருவாக உள்ளது. அதை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார்.

அதேபோல் அவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் ராயன். வடசென்னையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் தனுஷ் உடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், சந்தீப் கிஷான், பிக்பாஸ் சரவணன், பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இதன் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், ராயன் படம் குறித்த மற்றுமொரு ஹாட் அப்டேட் வெளிவந்துள்ளது. அதன்படி இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ராவும் சினிமாவில் அறிமுகமாக உள்ளாராம். யாத்ராவுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லாததால் அவரை ராயன் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தி இருக்கிறாராம் தனுஷ்.

இதுவரை அப்படத்தின் ஒளிப்பதிவாளர் யார் என்பதை அறிவிக்காமல் சீக்ரெட்டாக வைத்திருப்பதற்கு காரணமும் அதுதானாம். தனுஷ் தன்னுடைய மகனை வைத்து ஒரு படத்தையே சைலண்டாக எடுத்து முடித்துள்ளது தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *