வெங்கட் பிரபுவை கெட்டவார்த்தையால் திட்டிய விஜய் ரசிகர்.. அவர் என்ன செய்தார் தெரியுமா?

வெங்கட் பிரபுவை கெட்டவார்த்தையால் திட்டிய விஜய் ரசிகர்.. அவர் என்ன செய்தார் தெரியுமா?
  • PublishedMarch 2, 2024

தளபதி விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் பெரும்பாலான இடங்களில் கோட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அதன் பின்னர் பொங்கல் பண்டிகையைக்குதி கோட் படத்தில் நடித்து வரும் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் மற்றும் விஜய்யின் இன்னொரு லுக் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு கோட் படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என அறிவித்து இருந்தார். ஆனால், சொன்னபடி வெளியாகாததால், கடுப்பான நெட்டிசன் ஒருவர், எக்ஸ் தள பக்கத்தில், ‘சிங்கிள் பாடல் வெளியாகும் என்று நீங்கள் சொல்லி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது, ஆனால் இன்னும் வரவில்லை என்று கூறியதோடு, வெங்கட்பிரபுவை கெட்ட வார்த்தையில் திட்டி இருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கட் பிரபு, விஜய்யின் ரசிகர் என்று கூட பார்க்காமல் அவருக்கு பதிலடி கொடுத்து பதில் அளித்துள்ளார்.

அதில், கோட் படத்தின் சிங்கிள் பாடல் குறித்த தகவலை சொல்லலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் இப்போ இதுக்கு மேல எப்படின்னு நீங்களே சொல்லுங்க, விஜய் அண்ணா ரத்தமே என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் கெட்ட வார்த்தையால் திட்டிய அந்த ரசிகரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *