வரலட்சுமிக்கு நடந்து முடிந்தது நிச்சயதார்த்தம்.. இது யாருப்பா புதுசா இருக்காரு?

வரலட்சுமிக்கு நடந்து முடிந்தது நிச்சயதார்த்தம்.. இது யாருப்பா புதுசா இருக்காரு?
  • PublishedMarch 2, 2024

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் சாயா அவர்களின் மகளான வரலட்சுமி சரத்குமார், போடா போடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்த வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து விஜய், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து சர்க்கார், சண்டக்கோழி 2 போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் இவரது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த 14 ஆண்டுகளாக பழகி வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன, இந்நிலையில் நேற்றைய தினம் சரத்குமார், ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இவரது திருமணம் குறித்து அறிவிப்பை குடும்பத்தினர் வெளியிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

நீண்ட தலைமுடியுடன் சச்தேவ் இந்த புகைப்படங்களில் காணப்படுகிறார். இவர் மும்பையில் ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார். இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு தங்களது நிச்சயத்தை செய்து கொண்டுள்ளனர்.

விரைவில் இவர்களது திருமணம் குறித்து அறிவிப்பை குடும்பத்தினர் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தங்களது குலதெய்வ கோயிலின் கும்பாபிஷேகத்தில் சரத்குமார், ராதிகா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் வரலட்சுமியின் நிச்சயதார்த்த கலர்புல் புகைப்படங்கள் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *