இளையராஜா பயோபிக் : வைரமுத்தாக விஷால்… ஏ.ஆர்.ரஹ்மானாக சிம்பு…?

இளையராஜா பயோபிக் : வைரமுத்தாக விஷால்… ஏ.ஆர்.ரஹ்மானாக சிம்பு…?
  • PublishedMarch 28, 2024

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது என்ற அறிவிப்பு வந்ததிலிருந்து எங்கும் இளையராஜாவின் பயோபிக் பற்றியே பேச்சுக்கள் ஓடுகின்றன.

இந்தச் சூழலில் பயோபிக்கில் பாடலாசிரியர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் கேரக்டர்களில் நடிக்கவிருப்பதாக சில நடிகர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.

இளையராஜாவின் இசையமைப்பில் அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன.

மேலும் இப்படத்தை மெர்குரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கவிருக்கிறார்.

படத்துக்கு கமல் ஹாசன் திரைக்கதை எழுதுவது மேலும் ஆவலை தூண்டியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இளையராஜாவின் திரை வாழ்க்கையில் ரஜினி, கமல் ஹாசன், வைரமுத்து, பாரதிராஜா, பாலசந்தர், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் எல்லாம் தவிர்க்க முடியாதவர்கள்.

எனவே இந்தப் படத்தில் அவர்கள் கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்று கேள்விகள் எழுந்தன. ரஜினி, கமல் ஆகியோரே அவர்களது கேரக்டர்களில் நடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

இவற்றில் முக்கியமான கேள்வி எதுவென்றால் வைரமுத்து மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கேரக்டர்கள் பற்றியதுதான். ஏனெனில் இளையராஜா – வைரமுத்து கூட்டணி கல்ட் க்ளாசிக் கூட்டணி.

இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்து பிரிந்தவர்கள் கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகியும் மீண்டும் இணையவில்லை.

அதேபோல் ராஜாவின் கோட்டைக்குள் படையெடுத்து இசை சாம்ராஜ்ஜியத்தில் பங்கு போட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

எனவே இவர்கள் இருவரது கேரக்டர் படத்தில் எப்படி காண்பிக்கப்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் கேரக்டர்களில் நடிக்கவிருப்பதாக இரண்டு நடிகர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் வேறு யாருமில்லை விஷாலும், சிம்புவும்.

வைரமுத்து கேரக்டரில் விஷாலும், ரஹ்மான் கேரக்டரில் சிம்புவும் நடிக்கலாம் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் பேச்சுக்கள் எழ தொடங்கியிருக்கின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *