தனுஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்? எந்த படத்துலனு தெரியுமா?

தனுஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்? எந்த படத்துலனு தெரியுமா?
  • PublishedMarch 28, 2024

தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. இதையடுத்து தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியிருக்கும் அவர் அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இதற்கிடையே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கவிருக்கிறார் தனுஷ். இந்தச் சூழலில் அந்தப் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

இதில் தனுஷின் உறவினர் வருண் என்பவர் ஹீரோவாக நடிக்க; அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் போஸ்டரும் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறார்.

இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை தனுஷ் எழுதுகிறார் என்றும்; அந்தப் பாடலில் ஜிவி பிரகாஷும், பிரியங்கா மோகனும் தோன்றவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ் மற்றும் ஹீரோயின் பிரியங்கா மோகன் என்பது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *