நீண்ட தாடியுடன் தோற்றமளிக்கும் தனுஷ் : வைரலாகும் நியூ லுக்!

நீண்ட தாடியுடன் தோற்றமளிக்கும் தனுஷ் : வைரலாகும் நியூ லுக்!
  • PublishedMay 30, 2023

நடிகர் தனுஷ் தற்போது  அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில், நடித்துவருகிறார்.

இந்த படத்தினுடைய சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  சிவராஜ்குமார்,  சந்தீப் கிஷன்,  பிரியங்கா அருள்மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் பீரியட் ஆக்சன் அட்வெஞ்சராக எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகம்,  கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் மாத கணக்கில் எடுக்கப்பட்டு வரும் இப்படம் அவ்வப்போது பல சர்ச்சைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதேநேரம் இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள், கிராமப் புறங்களிலும், காட்டிலும் நடப்பதால் பல்வேறு பிரச்சினைகளையும் படக்குழு சந்தித்து வருகிறது.

இருப்பினும் படத்தை விரைவில் முடித்து வெளியிட வேண்டும் என்று பட குழுவினர் கடும் முயற்சி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இப்படத்தில் தனுஷின் தோற்றம் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக இருக்கிறது. பொதுவாகவே அவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

dhanush-captain-miller

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *