சூரியை பார்த்து பழைய ட்ரேக்கிற்கு வந்த சந்தானம்!

சூரியை பார்த்து பழைய ட்ரேக்கிற்கு வந்த சந்தானம்!
  • PublishedMay 30, 2023

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருந்த சூரி,  முதல் முதலாக வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இந்த படத்தைத் தொடர்ந்து  சூரி மாஸ் ஹீரோவாக தான் அடுத்தடுத்த படங்களில் நடிக்கப் போகிறார் என சொல்லப்பட்ட நிலையில்,  அதற்கு மாறாக டாப் நடிகர்களின் படங்களில் முன்பு போல் காமெடி நடிகராகவும் நடிக்க நான் தயார் என்று சற்றும் எதிர்பாராத பதிலை அளித்தார்.

ஆனால் சந்தானம் முதலில் காமெடி ஆக்டராக ரசிகர்களின் ஃபேவரட் நகைச்சுவை நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த அவர்,  அதன் பிறகு ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று முற்றிலுமாகவே காமெடியனாக நடிப்பதை தவிர்த்து விட்டார்.

கடந்த சில வருடங்களாக இவர் ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் அனைத்தும் படு தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடிக்கவே மாட்டேன் என ஆணித்தரமாக இருந்து தன்னை ஒரு ஹீரோவாகவே அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ரசிகர்கள் மட்டுமல்ல சந்தானத்தின் நலனை விரும்பிய பிரபலங்களும் அவருக்கு ஹீரோ ரோல் செட் ஆகவில்லை,  நகைச்சுவை நடிகராக நடிப்பது தான் உனக்கு நல்லது என அட்வைஸ் கொடுத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் சொன்னதெல்லாம் சந்தானத்திற்கு ஏறவில்லை.

இப்போது கண்கூடாக சூரியின் வளர்ச்சியை பார்த்தபின் நாம் செய்வது தவறுதான் போல என்று உணர்ந்து மீண்டும் காமெடி டிராக்டிற்கு வந்திருக்கிறாராம்.  இதனால் அடுத்தடுத்த படங்கள் இவருக்காக வரிசை கட்டி காத்திருக்கின்றனர்.

தற்போது இவரிடம் அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். ஆகவே இனி வரும் படங்களில் சந்தானம் காமடியனாகவும் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *