தனுஷ் உடன் நடிக்கப்போறாரா சிட்னி ஸ்வீனி.. இவங்க அந்த மாதிரி நடிப்பாங்களே…

தனுஷ் உடன் நடிக்கப்போறாரா சிட்னி ஸ்வீனி..  இவங்க அந்த மாதிரி நடிப்பாங்களே…
  • PublishedDecember 10, 2024

நடிகர் தனுஷ் ஏற்கனவே பிரெஞ்சு படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவெஞ்சர்ஸ் இயக்குநர்களான ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் வெளியான தி கிரேமேன் படத்தில் ரியான் காஸ்லிங் மற்றும் கிறிஸ் எவான்ஸ் உடனே இணைந்து நடித்து விட்டார் தனுஷ்.

இந்நிலையில், மீண்டும் ஹாலிவுட்டில் தனுஷ் லீடு ரோலில் நடிக்கப் போகும் ஸ்ட்ரீட் ஃபைட்டர் படம் உருவாகப் போவதாக தாறுமாறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும், அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடி இந்த யங் சென்சேஷனல் நடிகையா என பலரும் பொசுங்கி வருகின்றனர்.

தமிழில் இட்லி கடை, தெலுங்கில் குபேரா இந்தியில் Tere Ishk Mein என ஆல் இந்தியாவிலும் படங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கும் தனுஷ் ஹாலிவுட்டில் சோனி நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ படத்தில் நடிக்கப் போவதாகவும் பாக்ஸர் ஒருவரின் பயோபிக் படமாக இது உருவாகப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிரபல ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி ஸ்ட்ரீட் ஃபைட்டர் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 27 வயதாகும் சிட்னி ஸ்வீனி ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப்சீரிஸ் என ஏற்கனவே உலகளவில் பரீட்சையமானவர்.

ஸ்பைடர்மேன் நடிகர் டாம் ஹாலண்டின் காதலியும் நடிகையுமான ஜெண்டாயா நடிப்பில் வெளியான ஈஃபோரியா வெப்சீரிஸில் எல்லாம் பல காட்சிகளில் ஆடையே இல்லாமல் நிர்வாணக் கோலத்திலேயே படுக்கையறை காட்சிகளில் நடித்து பதற வைத்து இருப்பார் சிட்னி ஸ்வீனி.

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட், பிக் டைம் அடலசன்ஸ், மேடம் வெப், நைட் டீட், ரியாலிட்டி என பல படங்களில் நடித்துள்ள சிட்னி ஸ்வீனி, ஹீரோஸ், கிரே அனாடமி, எவ்ரிதிங் சக்ஸ், ஷார்ப் ஆப்ஜெக்ட்ஸ், ஈஃபோரியா, தி ஒயிட் லோட்டஸ், ரோபோட் சிக்கன் உள்ளிட்ட பல வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.

ஸ்ட்ரீட் ஃபைட்டர் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. ஆனால், ஹாலிவுட்டில் தனுஷ் மற்றும் சிட்னி ஸ்வீனி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தில் தனுஷ் கமிட் ஆனால், படம் தாறுமாறான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *