தனுஷின் பேச்சை கலாய்க்கும் நெட்டிசன்கள்…ஏன் தெரியுமா?

தனுஷின் பேச்சை கலாய்க்கும் நெட்டிசன்கள்…ஏன் தெரியுமா?
  • PublishedJune 18, 2025

சோசியல் மீடியாவில் இப்போது தனுஷ் பெரும் கன்டென்ட் ஆக மாறி இருக்கிறார். அவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா விரைவில் ரசிகர்களின் பார்வைக்கு வருகிறது.

 

சமீபத்தில் வெளிவந்த ட்ரெய்லர் அனைவரையும் கவர்ந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய பேச்சும் வைரலாகி வருகிறது. தனக்கு எதிராக நெகட்டிவிட்டி பரப்புபவர்களுக்கு அவர் தகுந்த பதிலடி கொடுத்திருந்தார்.

என் ரசிகர்கள் இருக்கும் வரை ஒரு செங்கலை கூட எடுக்க முடியாது என பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி இருந்தார். அதை அவருடைய ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஆனால் ரஜினி மற்றும் பிற நடிகர்களின் ரசிகர்கள் அதை கலாய்த்து வருகின்றனர். ஆனாலும் தனுசுக்கு தான் ஆதரவு இருக்கிறது. எந்த ஹீரோவும் பண்ணாததையா இவர் பண்ணிட்டாரு.

எல்லா இசை வெளியீட்டு விழாவிலும் ஹீரோக்கள் இப்படித்தான் அனல் பறக்க பேசுகிறார்கள். இது ஒரு விளம்பர யுக்தி. அப்போதுதான் படம் பார்க்க ஆடியன்ஸ் வருவார்கள் என்பது தயாரிப்பாளரின் எண்ணமாக இருக்கலாம்.

அதேபோல் ஹீரோக்கள் சில காரணங்களுக்காக இந்த மேடையை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படி இருக்கும் போது தனுஷை மட்டும் ஏன் கலாய்க்க வேண்டும் என்பது நடுநிலை ரசிகர்களின் கேள்வி.

உண்மையில் தனுஷ் பேசியதற்கு எந்த எதிர்ப்பும் கிடையாது. ஆனால் அவர் தன்னை ரஜினியாக நினைத்துக் கொண்டு அவர் ஸ்டைலில் பேசுவது தான் பிடிக்கவில்லை என நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

சாதாரணமா பேசினாலே போதும் ரியல் லைஃபிலும் ஹீரோ போல் வசனம் பேசுவது ஏன். அதனால்தான் அவரை கலாய்கின்றனர் சில நெட்டிசன்கள் வெளிப்படையான கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *