இந்தியன் 2 விமர்சனத்தினால் மனம் உடைந்த சித்தார்த்

இந்தியன் 2 விமர்சனத்தினால் மனம் உடைந்த சித்தார்த்
  • PublishedJune 18, 2025

பிள்ளை பிறப்பதற்கு முன்னாடியே பெயர் வைப்பது என்று சொல்வார்கள். அப்படித்தான் சித்தார்த் இந்தியன் 2 படத்தின் போது போட்ட ஆட்டமும்.

சித்தார்த் பெரும்பாலும் தமிழ் சினிமாவை மட்டுமே ஃபோக்கஸ் பண்ணி நடித்துக் கொண்டிருக்கும் ஹீரோ கிடையாது.தென்னிந்திய மொழியில் எந்த பட வாய்ப்பு கிடைத்தாலும் அதை கச்சிதமாக பயன்படுத்தக் கூடியவர்.

சமீபத்தில் இவர் நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை, சித்தா ஆகிய படங்கள் பெரிய வெற்றியை இவருக்கு கொடுத்தன. இதைத்தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் முக்கியமான கேரக்டர் ஒன்று நடித்தார்.படம் சகிக்க முடியவில்லை என ரசிகர்கள் கதறும் அளவுக்கு இருந்தது. ஆனால் இந்த படம் ரிலீசுக்கு முன்பே சித்தார்த் பெரிய அளவில் பில்டப் கொடுத்தார்.

இதனாலேயே இந்த படத்தின் விமர்சனம் வெளியான பிறகு அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு உள்ளானார்.

சமீபத்தில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் சித்தார்த் பங்கெடுத்துக்கொண்டார். அப்போது ஒரு படத்தில் எனக்கு பிடிச்ச விஷயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நான் நினைத்தேன். கடைசியில் என் சட்டையை பிடித்து கேட்கிற மாதிரி இது எங்களுக்கு பிடிக்கும்னு சொன்னியே என்று கேட்கிறார்கள்.

ஒருத்தருக்கு என்றால் நான் பதில் சொல்லி விடுவேன், 4 கோடி பேருக்கு என்ன பதில் சொல்ல. இனி நான் மதிக்கும் படங்களாக இருந்தாலும் மக்கள் விரும்பி வந்து பார்க்கட்டும். நானாக முன்வந்து உங்களுக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும் என்று இனி சொல்லப் போவது இல்லை என மனம் வந்து பேசி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *