நயன்தாராவின் உண்மையான குணம் பற்றி கூறிய யோகி

நயன்தாராவின் உண்மையான குணம் பற்றி கூறிய யோகி
  • PublishedJune 18, 2025

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம் எனக் கூறிய நயன்தாரா தான் இப்போது சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருகிறார். இச்சமயம் நயன்தாராவை பற்றி சமீபத்தில் யோகி பாபு பேசியது வலைதளத்தில் வைரலாகிறது.

தொடர் வெற்றி படங்களை கொடுத்த நயன்தாரா “நானும் ரவுடிதான்” படத்தில் நடிக்கும் போது விக்னேஷ் சிவனை காதலித்து சில ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்தது அனைவருக்கும் தெரிந்தது. தற்போது உலகு, உயிர் என்ற தன் ரெட்டை மகன்களுடன் அழகான வாழ்க்கையை வாழ்ந்த வருகிறார்.

மூக்குத்தி அம்மன் பாகம் 1 நல்ல வெற்றியை கொடுத்த நிலையில் தற்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தின் 2-வது பாகம் வெளிவர இருக்கிறது. இதைத் தொடர்ந்து மண்ணாங்கட்டி, ராக்காயி, டாக்ஸிக் போன்ற படங்களும் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றன.

2018ல் ரிலீசான கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபு நடித்திருந்தார் அதுவும் வெறும் டம்மி கதாபாத்திரம் இல்லை. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு ஜோடி போட்டு நடித்திருந்தார்.

அப்படத்தில் யோகி பாபுவின் காமெடி தான் பட்டையை கிளப்பியது. படம் ஓடிய அனைத்து தியேட்டரிலும் வசூல் கலெக்ஷன் அள்ளியது.

ஒரு காமெடி நடிகனுக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பா? என்று திரை உலகமே யோகி பாபுவை பற்றி பேச தொடங்கியது.

தற்போது பேட்டி ஒன்றில் நயன்தாராவை பற்றி பேசிய யோகி பாபு, நயன்தாரா என்னை மாதிரி ஒரு காமெடி நடிகருடன் நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம். கோலமாவு கோகிலா படத்தில் அவர் காலை என் முகத்தில் வைப்பது போன்ற காட்சிக்கு நயன்தாரா ஒப்புக்கொள்ளவே இல்லை. இயக்குனர் நெல்சன் திலீப் வற்புறுத்தியும் கடைசி வரையில் அவர் முகத்தின் மீது கால் வைக்கவே இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *