தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுபமா

தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுபமா
  • PublishedJune 18, 2025

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் டிராகன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இப்படத்தினை தொடர்ந்து அவர் நடிப்பில் மலையாள படமான Janaki vs State of Kerala என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், கொச்சியில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் அனுபமா மேடையில் பேசியிருக்கிறார்.

அதில், என்னால் நடிக்க முடியாது என்று நிறைய பேர் என்னை ட்ரோல் செய்தார்கள். அதையெல்லாம் மீறி இந்த படத்தின் இயக்குநர் பிரவீன் நாராயணன் என்னை முக்கிய ரோலில் நடிக்க வைத்தார். இப்படத்திற்கு இதயமாக ஜானகி கதாபாத்திரம் இருக்கிறது. அவளை என்னிடம் இப்படைத்ததற்கு நன்றி.

கோவிட் காலத்தின்போது என் தொழில் மற்றும் வாழ்க்கையில் நான் ஒரு பெரிய மாற்றத்தை உணர்ந்தேன். இப்படம் ஒரு வலுவான பெண் கதாபாத்திரத்தை சுற்றி இருக்கிறது, என்னை நம்பிய இயக்குநர் பிரவினுக்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன் என்று அனுபமா பரமேஸ்வரன் எமோஷ்னலாக பேசியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *