மீண்டும் குண்டை தூக்கி போட்ட துருவ நட்சத்திரம்…

மீண்டும் குண்டை தூக்கி போட்ட  துருவ நட்சத்திரம்…
  • PublishedNovember 20, 2023

கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது.

இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின.

இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

ஆனால் ரிலீஸுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் வியாபாரம் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

அதனால் படத்தின் மீதுள்ள கடன் காரணமாக நவம்பர் 24 ஆம் தேதி திட்டமிட்டபடி ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *