“இப்ப வாய் கிழிய பேசுற குஷ்பு, அப்போ எங்க போனாங்க?”

“இப்ப வாய் கிழிய பேசுற குஷ்பு, அப்போ எங்க போனாங்க?”
  • PublishedNovember 20, 2023

பிரபல நடிகர் மன்சூர் அலிகான், திரிஷா குறித்து பேசிய சில விஷயங்கள் அருவெறுக்கத்தக்க வகையில் இருந்தாக, பாதிக்கப்பட்ட நடிகை திரிஷா மற்றும் நடிகைகள் குஷ்பூ, ரோஜா இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்பட பல பிரபலங்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

லியோ பட வெற்றி விழாவில், தனக்கு திரிஷாவுடன் காட்சிகள் அமைக்கப்படவில்லை என்று கூறி வருத்தப்பட்ட மன்சூர் அலி கான், நடிகை மடோனாவை தனது சகோதரியாக காண்பித்ததற்கும் வருத்தப்பட்டு பேசினார். மேலும் ஒரு தனியார் சேனலில் பேசிய அவர், திரிஷாவை கட்டிலில் தூக்கி வீசி கற்பழிக்கும் காட்சிகள் இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் அதெல்லாம் நடக்கவில்லை என்று கூறி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மன்சூர் அலி கான் பேச்சு தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், லோகேஷ் உள்பட பலரும் அவருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் தான் தவறே செய்யவில்லை என்று உறுதிபட பேசியுள்ளார் மன்சூர் அலி கான்.

இதை தொடர்ந்து அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திரிஷா, தனது வருத்தத்தை பகிர்ந்துகொண்டார், அதை தொடர்ந்து பெண்கள் தேசிய மகளிர் ஆணையதின் உறுப்பினராக இருக்கும் குஷ்பூ நிச்சயம் மன்சூர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார், அவரை தொடர்ந்து அரசியல் தலைவரும் நடிகருமான ரோஜாவும் மன்சூர் அலி கானை எதிர்த்து பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் திரிஷாவிற்காக பரிந்து பேசும் நடிகை குஷ்பூ, அன்று சீமான் என்னை விபச்சாரி, 4 திருமணம் செய்தவர் நான் என்றெல்லாம் கூறும் பொது எங்கே சென்றார் என்ற கேள்வியை முன்வைத்துள்ளார் நடிகை விஜயலக்ஷ்மி.

இது குறித்து ஒரு காணொளியையும் அவர் வெளியிட்டுள்ளார். பாஜகவிற்கு ஆதரவாக சீமான் இருப்பதால் குஷ்பூ அவரை கண்டுகொள்வதில்லை என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *