பெற்றோரை பார்த்துக்கொள்ளதான் மும்பையில் செட்டிலானாரா ஜோதிகா!

பெற்றோரை பார்த்துக்கொள்ளதான் மும்பையில் செட்டிலானாரா ஜோதிகா!
  • PublishedMarch 28, 2023

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா சமீபகாலமான மும்பையில் செட்டிலாகியிருக்கிறார். சில நாட்களுக்கு முன் சூர்யா மும்பையில் 70 கோடி மதிப்பிலான ஒரு வீட்டினை வாங்கி அங்கு குடும்பத்துடன் தங்கியுள்ளார் என்ற தகவல் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

அப்படி சூர்யா மும்பை வீடு வாங்கி ஜோதிகா தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியன் சில நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் அஜித்தின் அப்பா மரணத்திற்கு முன் 4 வருடங்களாக உடல் நிலை மோசமாகி அவதிப்பட்டு வந்த விசயம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதே நிலை தான் மும்பையில் இருக்கும் ஜோதிகாவின் பெற்றோருக்கும் ஏற்பட்டிருக்கிறதாம்.

பெற்றோர்களின் ஒருவருக்கு உடல்நிலை முடியாமல் இருப்பதால் உடன் இருந்து பார்த்துக்கொள்ள ஜோதிகா மும்பையில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *