வெளியானது விடாமுயற்சி அப்டேட்.. மொக்கை வாங்கிய அஜித் ஃபேன்ஸ்

வெளியானது விடாமுயற்சி அப்டேட்.. மொக்கை வாங்கிய அஜித் ஃபேன்ஸ்
  • PublishedJanuary 17, 2024

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது ரிலீஸ் தேதி பொங்கல் அப்டேட்டாக வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இது நடக்கவில்லை.

இந்நிலையில், ரசிகர்களுக்காக லைகா விடாமுயற்சி படத்தின் ஓடிடி அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, விடாமுயற்சி ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக லைகா அறிவித்துள்ளது.

தியேட்டர் ரிலீஸூக்குப் பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாகும் விடாமுயற்சி படத்தை, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் பார்க்கலாம் என அப்டேட் கொடுத்துள்ளது.

பொங்கல் அப்டேட்டாக விடாமுயற்சி ஓடிடி ரைட்ஸ் மட்டும் கொடுத்துள்ளது லைகா நிறுவனம். ஆனால், ரசிகர்களோ அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *