நடிகர் விஜயின் சைட் பிஸ்னஸ் பற்றி தெரியுமா?

நடிகர் விஜயின் சைட் பிஸ்னஸ் பற்றி தெரியுமா?
  • PublishedMay 30, 2023

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வரும் நிலையில், அண்மைக்காலமாக அவர் அரசியலில் இறங்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியது.

மேலும் நடிகர் விஜய்க்கு ஏற்கனவே தமிழகத்தில் பல திருமண மண்டபங்கள்,  பல தொழில்கள்,  லண்டன் மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில் சொத்துக்கள்,  சென்னையில் ஆடம்பர வீடு மற்றும் கார்கள் என பல சொத்துக்கள் உள்ளன.

இவற்றையும் தாண்டி தற்போது விஜய் சைட் பிஸ்னஸில் இறங்கி இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது,  நடிகர் விஜய் தற்போது ஷாப்பிங் மால்,  மல்டிபிளக்ஸ் உள்ளிட்டவற்றை நிறுவி தொழில் செய்ய மும்முரமாக உள்ளார்.

இதன்படி  தமிழகம் முழுவதும் உள்ள சில மாவட்டங்களில் ஷாப்பிங் மால்,  திரையரங்குகள் உள்ளிட்டவை நிறுவி,  தான் சம்பாதித்த பணத்தை பல மடங்கு உயர்த்த நடிகர் விஜய் பலே கில்லாடியாக திட்டம் போட்டுள்ளார்.

தற்போது நடிகர் விஜய்யின் இந்த வியாபார யுக்தியை தெரிந்துக்கொண்டு சில நடிகர்கள் அவரை பின்தொடர முற்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *