சமூகவலைத்தளங்களில் கவனம் பெறும் துல்கர் சல்மானினி கிங் ஆஃப் கோதா திரைப்படம்!

சமூகவலைத்தளங்களில் கவனம் பெறும் துல்கர் சல்மானினி கிங் ஆஃப் கோதா திரைப்படம்!
  • PublishedMay 30, 2023

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் 2023 -ஆம் ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மேத்யு பதிவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. அதில்  2 வாரங்கள் தூக்கமில்லாமல் நடைபெற்ற படப்பிடிப்பு. இந்த வருடம் முழுவதும் சர்ப்ரைஸ். துல்கர் சல்மானுடன் அற்புதமான படப்பிடிப்பு என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *