திருமணம் வரைச் சென்று பிரிந்துச் சென்ற காதல் ஜோடிகள் : டேடிங் உறவால் நின்றுபோன த்ரிஷா திருமணம்!

திருமணம் வரைச் சென்று பிரிந்துச் சென்ற காதல் ஜோடிகள் : டேடிங் உறவால் நின்றுபோன த்ரிஷா திருமணம்!
  • PublishedMay 31, 2023

பிரபலங்களின் திருமணம் என்றாலே அதற்கு எதிர்பார்ப்புகள் அதிகம் எனில் ஒரு சில ஜோடிகள் மட்டுமே ஒன்று சேருகின்றனர். அவ்வாறு ஜோடி சேருபவர்களும் நீண்ட காலத்திற்கு சேர்ந்து வாழ்வதில்லை.

அவ்வாறு திருமணம் வரை சென்று நின்றுபோன சில காதல் ஜோடிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

த்ரிஷா- வருண்: பிரபல நடிகை ஆன த்ரிஷா,  தொழிலதிபரான வருணை திருமணம் செய்ய போவதாக ஒப்புக்கொண்டு இவர்களின் நிச்சயதார்த்தம் 2015 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின் த்ரிஷாவிடம் வருண்,  திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்பதை கூறியதன் காரணமாகவும் மற்றும் தனுஷ் உடன் த்ரிஷாக்கு இருந்த டேட்டிங் உறவாலும் இந்த திருமணம் நின்றுப்போனது.

விஷால் -அனிஷா: 2019 ஆம் ஆண்டு பிரபலங்களின் முன்னிலையில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விஷாலின் திருமணம் குறித்து பல எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் இவர் வரலட்சுமி உடன் நெருக்கம் காட்டியது பிடிக்காது கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்தை நிறுத்தி விட்டார் அனிஷா.

ராஷ்மிகா மந்தனா- ரக்ஷத்: புஷ்பா  ஸ்ரீ வாலி படத்தின் நடிகை ஆன ராஷ்மிகா மந்தனா மற்றும் கன்னட நடிகர் ஆன ரக்ஷித்தின் நிச்சயதார்த்தமும் 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பின் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் ஒத்து போகாததால் 2018ல் தனது திருமணம் இவருடன் நடைபெறாது என்பதை  ராஷ்மிகா மந்தனா அறிவித்தார்

நயன்தாரா -பிரபுதேவா: இவர்கள் இருவரின் நட்பும் காதலாக மலர்ந்து அதன் பின் 2009ல் திருமணம் செய்து கொள்ள போவதாக வதந்தி வெளியானது. இந்த இடைப்பட்ட வேலையில் பிரபுதேவாவின் மனைவியான ராம்லதா ஏற்படுத்திய பிரச்சனையைக் கண்டு நயன்தாரா பிரபுதேவாவை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்ஷன்- சனம் ஷெட்டி: சனம் ஷெட்டி மற்றும் தர்ஷனின் நிச்சயதார்த்தம் 2019ல் நடைபெற்றது. அதன் பின் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் பின் சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தார்கள். இதை மேற்கொண்டு சனம் ஷெட்டி தர்ஷன் மீது போலீஸ் புகார் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *