நாட்டாமை டீச்சர் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் நாட்டாமை. இந்த படத்தில் மிகப் பிரபலமான ஒரு கதாபாத்திரம் தான் டீச்சர் கதாபாத்திரம். இதில் டீச்சராக நடிகை ராணி நடித்திருப்பார்
இவருடைய தற்போதைய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் வெளியான வில்லுப்பாட்டுக்காரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்த ராணி ஜெமினி படத்தில் இடம்பெற்ற ஓ போடு என்ற பாடலில் குத்தாட்டம் போட்டிருப்பார். தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் ராணி கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை கிரங்கடித்து உள்ளார்.