2,000 டான்சர்களுடன் ஆடிய விஜய்!! “நா ரெடி” பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

2,000 டான்சர்களுடன் ஆடிய விஜய்!! “நா ரெடி” பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?
  • PublishedJune 22, 2023

நடிகர் விஜய் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருவதால், அவருக்கு பிறந்தநாள் பரிசாக, லியோ படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று 12 மணியளவில் விஜய்யின் லியோ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

ரத்தம் தெறிக்க வெளியான விஜய்யின் மாஸ் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு அடுத்தபடியா என்ன அப்டேட் வெளியாகும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது அடுத்த தரமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.

அதன்படி லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ விஜய் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என முன்னரே தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், அதன் ரிலீஸ் நேரத்தை சஸ்பென்ஸாக வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அதை ஒரு சிறப்பு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர்.

அதன்படி நா ரெடி பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பாடலில் தான் நடிகர் விஜய் சுமார் 2000 நடன கலைஞர்களுடன் நடனம் ஆடி இருக்கிறார். அதனால் இது வாத்தி கம்மிங் பாடலைப் போலவே மாஸ் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலை நடிகர் விஜய் தான் பாடியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *