அட்ராசக்க… வொண்டர் வுமனுக்கே வில்லியான பாலிவுட் குயின் ஆலியா பட்..

அட்ராசக்க… வொண்டர் வுமனுக்கே வில்லியான பாலிவுட் குயின் ஆலியா பட்..
  • PublishedJune 22, 2023

ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளை தொடர்ந்து ஹாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார் நடிகை ஆலியா பட்.

ஹாலிவுட்டில் நடிகை பிரியங்கா சோப்ரா வில்லியாக டுவைன் ஜான்சனின் பேவாட்ச் படத்தின் மூலம் அறிமுகமானார். அவரைப் போலவே தற்போது நடிகை ஆலியா பட்டும் வில்லியாக வொண்டர் உமனாக நடித்து அசத்திய நடிகை கால் கடோட்டின் புதிய படத்தில் நடித்துள்ளார்.

ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தின் அட்டகாசமான டிரெய்லர் வெளியாகி உலக ரசிகர்களை மிரட்டி உள்ளது. வொண்டர் உமனாக நடித்து டிசி ரசிகர்களை கிறக்கமடைய வைத்த கால் கடோட் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தில் ஒரே ஒரு சீனுக்கு தனுஷ் போல வந்து செல்லாமல், மெயின் வில்லியாக ஆலியா பட் நடித்து மாஸ் காட்டி உள்ளார்.

பைக் ரைடு, ஸ்கை ஜம்ப் என காட்சிகள் கதிகலங்க வைக்கின்றன. ஆலியா பட் அந்த ஹார்ட் ஆஃப் ஸ்டோனை திருடுவதில் இருந்து தான் டிரெய்லர் சூடு பிடிக்கிறது.

இத்தனைக்கும் இந்த படத்தில் நடிக்கும் போது நடிகை ஆலியா பட் கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு சினிமா மீதான ஆர்வத்தால் ஆலியா பட் உயிரைக் கொடுத்து இந்த படத்தில் நடித்துள்ளார்.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி நேரடியாக இந்த படம் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *