‘லியோ’ ஃபர்ஸ்ட் லுக் இந்த படத்தின் காப்பியா? ஆதாரத்தோடு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

‘லியோ’ ஃபர்ஸ்ட் லுக் இந்த படத்தின் காப்பியா? ஆதாரத்தோடு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
  • PublishedJune 22, 2023

தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது.

இரண்டு போஸ்டர்களையும் ஒப்பிட்டு, நெட்டிசன்கள் பலர் கமெண்ட்டுகள் மூலம் படக்குழுவை போட்டு தாக்கி வருகிறார்கள்.

தமிழ் திரையுலகை தாண்டி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என அனைத்து மொழிகளிலுமே தளபதி விஜய்க்கு ஆயிரம் கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தளபதி விஜயின் 49-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு அனைத்து திரையுலகை சேர்ந்த ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைதளத்தின் மூலம் நேற்றில் இருந்தே தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தளபதியின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, இன்று ‘லியோ’ படத்தில் இருந்து பல அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இன்று மாலை விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘லியோ’ படத்தில் இருந்து, தளபதி பாடி, 2000 டான்சர்களுடன் நடனமாடியுள்ள ‘ நா ரெடி’ என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாக உள்ள நிலையில்… நேற்று இரவு 12 மணிக்கு விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டது படக்குழு.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, தளபதி விஜய் ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமான வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த போஸ்டர் தற்போது காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது. ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்ப்பதற்கு, Game of Thrones வெப் தொடரில் வரும் கதாநாயகன் ஜான் ஸ்னோவ் போஸ்டர் லுக் போலவே இருக்கிறது என கூறி நெட்டிசன்கள் இரண்டு போஸ்டரையும் ஒப்பிட்டு போட்டு தாக்கி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *