ரஜினியின் “கூலி” படத்தில் நடிக்க விருப்பமா? இதோ உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம்

ரஜினியின் “கூலி” படத்தில் நடிக்க விருப்பமா? இதோ உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம்
  • PublishedApril 30, 2024

ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார்.

படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கும் சூழலில் அந்தப் படத்தில் நடிப்பதற்கான ஆடிஷன் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஜினியை வைத்து எப்படிப்பட்ட படத்தை லோகேஷ் கொடுக்கப்போகிறார் என்ற ஆவல் கோலிவுட்டில் இருக்கிறது. இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்த லோகேஷ், ‘நான் கமலின் தீவிர ரசிகராக இருந்தாலும் ரஜினியின் படங்களையும் ஓபனிங் டே ஓபனிங் ஷோ பார்ப்பேன். ரஜினிகாந்த்தை நான் ஒரு விஷனில் பார்க்கிறேன். அப்படித்தான் இந்தப் படமும் இருக்கும். முழுக்க முழுக்க இது ஒரு எக்ஸ்பெரிமெண்ட்டல் படம்தான்” என்றிருந்தார்.

இதனால் கண்டிப்பாக இந்தப் படத்தில் தரமான சம்பவம் இருக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூலி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. அதாவது படத்துக்கு தேவைப்படும் சில கதாபாத்திரங்களுக்கான ஆடிஷன் தொடங்கியுள்ளது. அதுதொடர்பான அறிவிப்பில் ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடங்கள்வரை ஆடிஷனுக்கு ஏற்ற வீடியோ க்ளிப்பிங்குகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகைப்படம், முகவரியுடன் அனுப்ப வேண்டும் என்றும்; இன்ஸ்டாகிராம் ரிலீஸ் வீடியோக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *