“ஷாருக்கானின் ஹாட்ரிக் ப்ளாக் பஸ்டர்..” டங்கி டிவிட்டர் விமர்சனம்…

“ஷாருக்கானின் ஹாட்ரிக் ப்ளாக் பஸ்டர்..” டங்கி டிவிட்டர் விமர்சனம்…
  • PublishedDecember 21, 2023

ஷாருக்கான் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள டங்கி திரைப்படம் இன்று வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. டங்கி ஷாருக்கானின் ஹாட்ரிக் ப்ளாக் பஸ்டர் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஷாருக்கான் நடித்துள்ள டங்கி படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. அவரும் ஷாருக்கானும் இணைவதாக அறிவிப்பு வெளியான நாள் முதலே டங்கி படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், ஷாருக்கான் நடித்துள்ள டங்கி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்தாண்டு ஷாருக்கான் நடிப்பில் பதான், ஜவான் ஆகிய படங்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இந்த இரண்டு படங்களுமே 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது. அந்த வரிசையில் டங்கியும் இணைந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மும்பை, டெல்லி உட்பட வடமாநிலங்களில் டங்கி படத்தின் அதிகாலை காட்சி திரையிடப்பட்டது. அதனைப் பார்த்த ரசிகர்கள் டங்கி படத்துக்கு பாசிட்டிவாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

டங்கி திரைப்படத்தின் முதல் பாதி செம்ம காமெடியாக இருப்பதாகவும், எக்ஸாமினேஷன் சென்டர் காட்சியில் தியேட்டரே தெறிக்கிறது எனவும் விமர்சனம் வந்துள்ளது. அதேபோல் இடைவேளை காட்சியும் சூப்பராக இருப்பதாகவும், இதனால் இரண்டாம் பாதியில் எமோஷனல் அதிகம் இருக்கும் எனவும் மூவி தமிழ் தளம் விமர்சனம் தெரிவித்துள்ளது.

அதேபோல், டங்கி ஷாருக்கானின் ஹாட்ரிக் ப்ளாக் பஸ்டர் ஹிட் மூவி எனவும், அவரது கதை தேர்வு சிலிர்க்க வைத்துள்ளதாகவும் நெட்டிசன் விமர்சனம் செய்துள்ளார். பதான், ஜவான் படங்களை விட டங்கி தான் ஷாருக்கானின் பெஸ்ட் மூவி என பாராட்டியுள்ளார். வெளிநாடு சென்று படிக்க ஆசைப்படுபவர்களின் பின்னணியில் உருவாகியுள்ள டங்கி, பல உண்மைகளை தில்லாக பேசியுள்ளது. இந்தப் படத்தை குடும்பத்துடன் சென்று பாருங்கள், தரமான மூவி என கூறியுள்ளார்.

இன்னொரு ரசிகர், டங்கி திரைப்படம் ஷாருக்கானின் மாஸ்டர் பீஸ் என புகழ்ந்துள்ளார். பாலிவுட்டின் கேம் சேஞ்சராக டங்கி திரைப்படம் உருவாகியுள்ளது. இது ராஜ்குமார் ஹிரானியின் 3 இடியட்ஸ் படத்தை விட செம்ம எனவும் பாராட்டியுள்ளார். ஷாருக்கானின் டங்கி படத்தை கண்டிப்பாக பாருங்கள் என ட்வீட் போட்டுள்ள அந்த ரசிகர், 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார்.

அதேபோல், டங்கி இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியும் சிறந்த படம் என பாராட்டியுள்ளார். டங்கி படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பை ஷாருக்கான் பூர்த்தி செய்துள்ளார். பாடல்கள், எமோஷனலான சீன்ஸ், காமெடி என எல்லாமே சூப்பர் என நெட்டிசன் ஒருவர் பாராட்டியுள்ளார். இவர் டங்கி படத்துக்கு 4.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார்.

டங்கி நிச்சயமாக பாலிவுட்டின் மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்று என பிரபல ஆங்கில பத்திரிக்கை டிவிட்டர் விமர்சனம் செய்துள்ளது. அதில், இந்தப் படத்துக்கு 4.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளதோடு, ஷாருக்கான், ராஜ்குமார் ஹிரானி கூட்டணியை பாராட்டியுள்ளது. டங்கி படத்துக்காக ஷாருக்கான் எப்போதும் நினைவில் இருப்பார். ஷாருக்கான், டாப்ஸி உட்பட அனைவரது நடிப்பும் சூப்பர் என குறிப்பிட்டுள்ளது. ராஜ்குமார் ஹிரானியின் 20 ஆண்டு திரை பயணத்தில் டங்கி தான் பெஸ்ட் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை வெளியான விமர்சனங்களை வைத்து பார்க்கும் போது டங்கி, ஷாருக்கானின் ஹாட்ரிக் ப்ளாக் பஸ்டர் என்பதில் சந்தேகமே இல்லை. பதான், ஜவான் படங்களைத் தொடர்ந்து டங்கியும் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸில் இணையும் என சொல்லப்படுகிறது. அதேபோல், பிரபாஸின் சலார் படத்துக்கு சரியான சவாலாக இருக்கும் என ஷாருக்கான் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *