நான் வேணுமா? உன் அம்மா வேணுமா? கண்டிஷன் போட்ட ஐஸ்வர்யா ராய்?

நான் வேணுமா? உன் அம்மா வேணுமா? கண்டிஷன் போட்ட ஐஸ்வர்யா ராய்?
  • PublishedDecember 21, 2023

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனுக்கும் பிரச்னை என்று தகவல் வெளியாகியிருக்கும் சூழலில் அதுகுறித்து புதிய விஷயங்களை பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.

சல்மான் கானுடனான காதல் முறிவுக்கு பிறகு ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை காதலிக்க தொடங்கினார். பிறகு இரண்டு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார். இருவருக்கும் ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.

சூழல் இப்படி இருக்க கடந்த சில வருடங்களாகவே அவர்கள் இரண்டு பேருக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும், அதனால்தான் அவர் அணிவித்த மோதிரத்தை அபிஷேக் பச்சன் தன்னுடைய விரலில் அணிந்துகொள்ளவில்லை என்றும் பேச்சு எழுந்தது. அதுமட்டுமின்றி அபிஷேக் பச்சனிடமிருந்து கூடிய விரைவில் அவர் விவாகரத்து பெற்றுவிடுவார் என்றும் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதுமட்டுமின்றி அமிதாப் பச்சன், ஜெயா பச்சனுடன் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது அங்கிருந்து வெளியேறி தனது மகள் மற்றும் தாயுடன் தனியாக வசித்துவருவதாகவும் சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் வட்டாரம் தெரிவித்தது. அதேசமயம் ஆராத்யா படிக்கும் பள்ளி ஆண்டு விழாவுக்கு குடும்பமாக வந்திருந்தார் ஐஸ்வர்யா.

ஆனால் அது வெறும் கண் துடைப்புக்குத்தான். உண்மையில் அவருக்கும் அபிஷேக் பச்சனுக்கும் இடையே உரசல் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது என்கின்றனர் ஒருதரப்பினர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் பிரச்னை குறித்து எனக்கு தெரிந்த டெல்லி நிருபர்களிடம் கேட்டபோது உண்மை என்கிற மாதிரிதான் சொல்கிறார்கள்.

என்ன பிரச்னை என்று கேட்டால் வழக்கமாக எல்லோரின் வீட்டிலும் வருவது போன்ற மாமியார், மருமகள் பிரச்னைதான் என்று கூறுகிறார்கள். ஐஸ்வர்யா ராய் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். அபிஷேக் பச்சனிடம் நான் முக்கியமா இல்லை உன் அம்மா முக்கியமா என்ற கேள்வியையும் அவர் முன் வைத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். அதனால் தனியாக ஒரு வீட்டில் தங்கலாமா என்ற யோசனைக்கும் அபிஷேக் வந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *