விபத்து நடந்தாலும் சர்வானந்த் – ரக்‌ஷிதாவிற்கு டும்டும்டும்….!!

விபத்து நடந்தாலும் சர்வானந்த் – ரக்‌ஷிதாவிற்கு டும்டும்டும்….!!
  • PublishedJune 4, 2023

எங்கேயும் எப்போதும், கணம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் சர்வானந்த் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

ரக்‌ஷிதா ரெட்டி என்பவரை காதலித்த சர்வானந்த்தின் நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்றது.

கூடிய விரைவில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்த்திருந்த வேலையில் நடிகர் சர்வானந்த் பிசியாக இருந்தார்.

sharwanand rakshitha reddy engagement photos 1 scaled South Sea Pearl ...

எனினும் சில நாட்களுக்கு முன்னதாக இருவருக்கும் திருமணம் என அறிவித்திருந்தனர்.

இந் நிலையில் கடந்த மே 28ம் தேதி ஹைதராபாத் நகரின் ஃபிலிம் நகர் ஜங்ஷன் அருகே திடீரென சாலையின் ஓரம் மோதி இவர் சென்ற கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.

. இந்த விபத்தில் நடிகர் சர்வானந்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு குவிந்த பொதுமக்கள் சர்வானந்தை மருத்துவமனையில் சேர்த்தனர்.

Telugu Actors Sharwanand And Rakshita Reddy Engagement Ceremony (4 ...

திருமணத்துக்கு 5 நாட்கள் முன்னதாக இப்படியொரு விபத்து நடந்த நிலையில், அவரது திருமணம் நடக்குமா? தள்ளிப் போகுமா? என கேள்விகள் கிளம்பின.

எனினும் நடிகர் சர்வானந்த் ஜூன் 3ம் தேதி இரவு 11 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள பழம்பெரும் அரண்மனையில் பிரம்மாண்டமாக தனது திருமணத்தை செய்துள்ளார்.

தனது காதலி ரக்‌ஷிதா ரெட்டியின் கழுத்தில் தாலி கட்டிய சர்வானந்தின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

More Pics: Sharwanand - Rakshitha Engagement

நடிகர் சர்வானந்த் மற்றும் அவரது காதலி ரக்‌ஷிதா ரெட்டி இருவரும் திருமணக் கோலத்தில் ராஜ உடையில் செம அழகாக அணிகலன்களுடன் ஜொலித்த புகைப்படங்கள் தற்போது வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சர்வானந்தின் திருமண நிகழ்ச்சியில் பல முன்னணி நடிகர்கள் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதில் ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் சர்வதேச கவனத்தை ஈர்த்த நடிகர் ராம்சரண் திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *