த்ரிஷாவிற்கு அடித்தது ஜக்போட்….!!!

த்ரிஷாவிற்கு அடித்தது ஜக்போட்….!!!
  • PublishedJune 4, 2023

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ள நிலையில், தற்போது மதுரையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கவுள்ள டி50 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷின் இயக்கத்தில் உருவாகும் டி50 படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக த்ரிஷா இணைந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

See the source image

நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தன்னுடைய ரசிகர்களையும் இவர் தன்னுடைய படங்கள்மூலம் கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் வெளியான வாத்தி, இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

முன்னதாக ஹாலிவுட், பாலிவுட் படங்களிலும் நடித்து இவர் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

மதுரையில் ஜாக்கிங் செல்லும் தனுஷின் வீடியோவும் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நீண்ட தாடி, மீசை மற்றும் தலைமுடியுடன் தனுஷை பார்க்க முடிகிறது.

Trisha In Dhanush Kodi Movie - Gethu Cinema

இந்தப் படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் கமிட்டாகியுள்ளார் தனுஷ். அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி50 படத்தை இயக்கவுள்ளார்.

ப பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ளது டி50 படம்.

இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன

இந்தப்படம் மிகவும் அதிகமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

See the source image

வடசென்னை போன்று கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள டி50 படத்திற்கான லொகேஷன்களை பார்க்கும் வேலைகளையும் படக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் த்ரிஷா இணையவுள்ளது அவரது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் -மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் விடாமுயற்சி படத்திலும் கமலின் KH234 படத்திலும் இணையவுள்ளார்.

இந்நிலையில் தற்போது தனுஷுடன் அவர் இணையவுள்ளது மிகுந்த சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் 50வது படத்தில் த்ரிஷா இணைந்துள்ளார்.

See the source image

முன்னதாக அஜித்தின் 50வது படமான மங்காத்தா படத்தில் த்ரிஷா ஜோடியாக நடித்த நிலையில், தற்போது தனுஷின் 50வது படத்திலும் அவர் இணையவுள்ளார்.

Trisha at Nayaki Audio Launch - Page 23 | Bollywood Celebs | Fropky.com

 

PS 1 Audio Launch Actress Trisha Photos In Pink Saree Ponniyin Selvan ...

 

Trisha - Actress Profile, Pictures, Movies, Events | nowrunning

Actor Dhanush And Trisha Stills From Kodi Tamil Movie - TamilScraps.com

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *