2023-இன் அதிக பிரபலமான திரைப்படங்களில் இடம்பிடித்த லியோ… மகிழ்ச்சியில் லோகேஷ்

2023-இன் அதிக பிரபலமான திரைப்படங்களில் இடம்பிடித்த லியோ… மகிழ்ச்சியில் லோகேஷ்
  • PublishedDecember 2, 2023

2023ஆம் ஆண்டு திரையங்குகளில் வெளியாகி அதிக பிரபலமான இந்திய திரைப்படங்களின் பட்டியலை IMDb India வெளியிட்டுள்ளது.

இதில் முதலிடத்தில் ஷாருக்கானின் ஜவான் இருக்கிறது. இரண்டாவது இடத்தைப் பதான் திரைப்படம் பிடித்திருக்கிறது. 3. ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி, 4. லியோ, 5. ஓஎம்ஜி 2, 6. ஜெயிலர், 7. கடார் – 2, 8. தி கேரளா ஸ்டோரி, 9. து ஜோதி மெயின் மக்கார், 10. போலா ஆகியவை பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

ரஜினி மற்றும் விஜய் ஆகியோரின் இரண்டு தமிழ் படங்கள் இப்பட்டியலில் இடம் பிடித்து கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக, ஜவான் படத்தை அட்லி இயக்கியது என்பதால் 3 தமிழ் இயக்குநர்கள் இந்திய அளவில் பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர்.

மேலும், நேரடியாக ஓடிடியில் வெளியாகி பிரபலமடைந்த படங்களின் பட்டியலில், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 (lust stories 2), ஜானே ஜான் (jaane jaan), மிஷன் மஞ்சு, பவால், சோர் நிகல் கே பஹா (chor nikal ke bhaga), பிளடி டாடி, சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹாய் (sirf ek banda kaafi hai), கேஸ்லைட், கதல்: ஏ ஜாக் புரூட் (kathal: a jackfruit), மிஸ்சஸ் அண்டர்கவர் (mrs.undercover) முதல் பத்து இடங்களைப் பிடித்துள்

இதேவேளை, குறித்த பட்டியலில் லியோ படம் இடம்பெற்றதையடுத்து லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக விக்ரம் படமும், இரண்டாவது முறையாக லியோவும் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கு நன்றி கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *