“விவாகரத்துக்கு தயாரான ஹீரோயின்” யார் தெரியுமா?

“விவாகரத்துக்கு தயாரான ஹீரோயின்” யார் தெரியுமா?
  • PublishedDecember 2, 2023

இப்போதெல்லாம் ஹீரோயின்கள் திருமணமான வேகத்திலேயே விவாகரத்து என வந்து நிற்கின்றனர். இதில் கடும் அதிர்ச்சியை கொடுத்த விவாகரத்து சம்பவம் என்றால் சமந்தா-நாகா சைத்தன்யா, அமலா பால்-ஏ எல் விஜய் ஆகியோரின் திருமண முறிவு தான்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிகள் விவாகரத்து செய்தது இப்போது வரை அவர்களுடைய ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

அதேபோல் தனுஷ், ஐஸ்வர்யா திருமண முறிவும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வரிசையில் தற்போது மண்டேலா, திரௌபதி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஷீலாவும் இணைந்துள்ளார்.

நல்ல நடிப்பு திறமை கொண்ட இவர் இப்போது வளர்ந்து வரும் ஒரு நடிகையாக இருக்கிறார். இந்த சூழலில் அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் திருமண உறவில் இருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும் அன்பும் என பதிவிட்டுள்ளார்.

இதுதான் இப்போது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கூத்து பட்டறை நடத்தி வரும் சோழன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *