மற்றுமொரு அதிர்ச்சி செய்தி – ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து?

மற்றுமொரு அதிர்ச்சி செய்தி – ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து?
  • PublishedMay 12, 2024

பத்தாம் ஆண்டு திருமண நாளை ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி மகிழ்ச்சியாக கொண்டாடிய நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்தை பெற முடிவு செய்து இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்றோ அல்லது நாளையோ வெளியிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஜிவி மற்றும் சைந்தவி இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளிக் காலத்திலேயே காதலித்து வந்த இவர்கள், கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். 2020ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது.

தங்களது மகளுக்கு அன்வி என்று பெயர் வைத்தனர். தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமில்லாமல் திரை வாழ்க்கையில் இருவரும் சேர்ந்து பணியாற்றினார்கள். ஜிவி இசையமைத்த பல அழகான பாடல்களை தனது குரலின் மூலமாக மேலும் அழகாக்கியவர் சைந்தவி.

உதயம் என்.ஹெச் 4 படத்தில் யாரோ இவன், மயக்கம் என்ன படத்தில் பிறை தேடும், த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் என்னாச்சு ஏதாச்சு, தலைவா படத்தில் யார் இந்த சாலையோரம் ஆகியவை இருவரும் சேர்ந்து தங்களது குரலில் ரொமான்ஸ் செய்த பாடல்களாக அமைந்தன.

தற்போது இவர்கள் விவாகரத்து பெற முடிவு செய்து இருப்பது சினிமா பிரபலங்களை மட்டுமில்லாமல், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *