விஜய், கமல் வரிசையில் அரசியலில் கால் பதிக்கும் சிங்கம்… சத்தமில்லாமல் போட்ட பிள்ளையார் சுழி

விஜய், கமல் வரிசையில் அரசியலில் கால் பதிக்கும் சிங்கம்… சத்தமில்லாமல் போட்ட பிள்ளையார் சுழி
  • PublishedMay 12, 2024

விஜய் கோட் படத்தை முடித்த கையோடு தளபதி 69ல் நடிக்க உள்ளார். இதற்கு அடுத்து முழு நேர அரசியல் பயணத்தை தொடங்கும் அவர் 2026 தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கிறார்.

இந்நிலையில் இவருக்கு போட்டியாக சூர்யாவும் அரசியலுக்கு அடித்தளம் நாட்ட இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே இவருடைய நற்பணி இயக்கம் மூலம் பல விஷயங்களை செய்து வருகிறார்.

அதன்படி இந்த இயக்கம் 60 மாவட்டங்களாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அதில் தற்போது வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றுள்ளது.

அந்த வகையில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த மீட்டிங் நடைபெற்று இருக்கிறது. இதில் கலந்துகொண்ட நிர்வாகிகளிடம் எதிர்கால திட்டமிடல் மற்றும் இயக்கத்தை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டிருக்கிறது.

இந்த செய்தி தற்போது கசிந்துள்ள நிலையில் விஜய்க்கு போட்டியாக சூர்யா அரசியல் வியூகத்தை கையில் எடுக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே சூர்யா தன் ரசிகர்களை சந்தித்த போது கூட இப்படித்தான் பேசப்பட்டது.

ஆனால் தற்போது இது உறுதியாகும் என்ற பேச்சும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆக மொத்தம் கமல், விஜய் வரிசையில் சூர்யாவும் விரைவில் தன் அரசியல் வருகையை மக்களுக்கு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *