வந்தாச்சி…. வந்தாச்சி…. GOAT படத்தின் இசைவெளியீட்டு செய்தி

வந்தாச்சி…. வந்தாச்சி…. GOAT படத்தின் இசைவெளியீட்டு செய்தி
  • PublishedMay 11, 2024

விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார்.

படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் GOAT படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

விஜய் இன்று அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார். அதற்கு அவர் ஏர்போர்ட்டுக்கு வந்தபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. எனவே இதுதான் கண்டிப்பாக இறுதிக்கட்ட ஷூட்டிங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் விஜய் ஷூட்டிங்கிற்காக சென்றிருக்கிறாரா இல்லை வேறு ஏதேனும் பணிக்காக சென்றிருக்கிறாரா என்றும் ரசிகர்கள் தங்களது கேள்வியை சமூக வலைதளங்களில் எழுப்பிவருகின்றனர்.

இந்நிலையில் GOAT படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இன்னும் சில மாதங்களில் மலேசியாவில் நடைபெறும் என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே படத்தின் இரண்டாவது சிங்கிள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியிடப்படலாம் என்ற பேச்சும் ஒடிக்கொண்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *