சூர்யாவை திருப்தி படுத்த இஸ்டத்திற்கு உருட்டும் கங்குவா படக்குழு!

சூர்யாவை திருப்தி படுத்த இஸ்டத்திற்கு உருட்டும் கங்குவா படக்குழு!
  • PublishedMay 10, 2023

சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம், லியோ திரைப்படத்திற்கு போட்டியாக வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இதற்கமைவாக லியோ படத்தின் ப்ரீ பிஸ்னஸை விட இந்த படம் அதிகளவு வியாபாரம் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.   தமிழுக்கான டிஜிட்டல் உரிமை மட்டும் 80 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகி இருக்கிறது.

அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த மொழிகளிலும் இதன் வியாபாரம் இப்போதே களை கட்ட ஆரம்பித்துள்ளதாகவும் இதுவரை இல்லாத அளவுக்கு ஃப்ரீ பிசினஸ் இருக்கும் எனவும் தயாரிப்பாளர் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்கள்.

அந்த வகையில் இப்போதே 100 கோடியை தாண்டி வியாபாரம் ஆகி இருக்கிறது என பட குழு கெத்தாக அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இது அத்தனையும் சூர்யாவுக்காக அள்ளி விடும் பொய் என ஒரு தகவலும் பரவி வருகிறது.

சூர்யாவை  திருப்திபடுத்துவதற்காகவே தயாரிப்பு தரப்பு இது போன்ற அறிக்கைகளை வெளியிட்டு வருகிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *