தொகுப்பாளினி மணிமேகலைக்கு ஏற்பட்ட சோகமான நிலை… கை கொடுத்த ஸோதிடர்

தொகுப்பாளினி மணிமேகலைக்கு ஏற்பட்ட சோகமான நிலை… கை கொடுத்த ஸோதிடர்
  • PublishedFebruary 3, 2024

குக் வித் கோமாளி மணிமேகலை தற்போது பண கஷ்டத்தில் சிக்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சன் மியூசிக், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வந்து, தன்னுடைய கலகலப்பான பேச்சாலும், அழகாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் மணிமேகலை. சில திரைப்படத்திலும் இவர் நடித்த நிலையில், அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால்… சின்னத்திரையில் தொடர்ந்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் இவர் ஹுசேன் என்பவரை காதலித்த நிலையில், பெற்றோர் தங்களின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால், வீட்டை விட்டு வெளியேறி அவரையே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஃபினான்சியல் ரீதியாக கஷ்டப்பட்டு வந்த மணிமேகலைக்கு கைகொடுத்து தூக்கி விட்டது விஜய் டிவி தான்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கணவருடன் கலந்துகொண்ட மணிமேகலை நடன திறமையை வெளிப்படுத்தி இரண்டாவது பரிசை தட்டி சென்றார்.

இதை தொடர்ந்து விஜய் டிவியில் துவங்கப்பட்ட, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில், கோமாளியாக கலந்து கொண்டார். இதுவரை ஒளிபரப்பான அனைத்து சீசன்களிலும் கோமாளியாக வந்த மணிமேகலை… திடீர் என கடந்த சீசனில், இனி நான் கோமாளியாக வர போவதில்லை என அறிவித்தார்.

இந்த தகவல் ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா? என பலர் கேள்விகளையும் எழுப்பினார்.

தன்னுடைய யூடியூப் பக்கத்தின் மூலம் நன்கு கல்லா கட்டி வந்த மணிமேகலை… 2 கார், வீடு என சென்னையில் செட்டில் ஆகி விட்டாலும், தற்போது கிராமத்தில் பிரமாண்ட வீடு ஒன்றையும் கட்டி வருகிறார்.

சமீப காலமாக இவருக்கு விஜய் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதுவும் கிடைக்காத நிலையில்… யூ டியூப் மூலமும் சரியாக வருமானம் இல்லாமல் போனது.

எனவே தற்போது தன்னுடைய வீட்டின் ஹவுசிங் லோன் கூட கட்ட முடியாத சூழலில் இருப்பதாக, மணிமேகலை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், தனக்கு முன்பைப் போல் நிகழ்ச்சிகள் அதிகமாக வருவதில்லை என்றும், இதனால் வருமான வாய்ப்புகள் குறைந்து வீட்டு கடனை கட்டக்கூட சிரமப்பட்டதாகவும் கூறியுள்ளார். எனினும், அம்மாவின் ஆலோசனைப்படி சில ஜோதிடர்களை பார்த்து ஆலோசனை பெற்ற பிறகு தற்போது நிலைமை சற்று மேம்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மணிமேகலையின் இந்த நிலையை கண்டு, ரசிகர்கள் பலர் உங்களை விஜய் டிவி கை விட்டுவிட்டதா? என கேள்வி எழுப்புவதோடு தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் விஜய் டிவி வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும், அண்மையில் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மணிமேகலை மற்றும் பாலாவுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது.

இதேவேளை, மணிமேகலை ஒன்றும் இல்லாமல் கிராமத்தில் வீடுகட்டவில்லை. சென்னையில் கார் வீடு என இருக்கும் போதே பண்ணை வீடு கட்டுகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *