“இங்கு 1000 கொடுத்தால் அனைத்தும் கிடைக்கும்” சன்னி லியோனின் புது பிஸ்னஸ்

“இங்கு 1000 கொடுத்தால் அனைத்தும் கிடைக்கும்” சன்னி லியோனின் புது பிஸ்னஸ்
  • PublishedFebruary 3, 2024

பாலிவுட் திரையுலகத்தில் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை சன்னி லியோன் தற்போது ஹோட்டல் பிசினஸில் கால் பதித்துள்ளார்.

ஆபாச நடிகையாக அறியப்பட்ட நடிகை சன்னி லியோன், தற்போது தென்னிந்திய மொழி படங்களிலும், பாலிவுட் படங்களிலும் படு பிசியாக நடித்து வருகிறார்.

ஓய்வில்லாமல் நடித்து வந்தாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், தன்னுடைய மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரம் செலவிடமும் அவர் மறந்தது இல்லை.

தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு ஜெய்யுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட இவர், ஒ மை கோஸ்ட், தீ இவன், வீரம்மா தேவி போன்ற படங்களிலும் நடித்தார். இதில் சில படங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளது. ஹிந்தி மற்றும் தமிழ் மொழி படங்களை தொடர்ந்து, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

தற்போது இவரின் கை வசம் ஒரு டஜன் படங்கள் உள்ள நிலையில்… நடிப்பில் மூலம் வரும் பணத்தை புதிய தொழிலில் இன்வெர்ஸ் செய்துள்ளார்.

அதாவது சன்னி லியோன் ‘chica loca’ என்கிற ஹோட்டல் பிஸ்னஸ் ஒன்றை துவங்கியுள்ளார். பலவகையான வெரைட்டி சாப்பாடுகள் இங்கு கிடைக்கும் என்றும், ஒரு ஆளுக்கு 1000 ரூபாய் செலுத்தினால், இங்கு உள்ள அனைத்து உணவுகளையும் அன்லிமிட்டடாக சாப்பிடமுடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ரசிகர்கள் பலர் புதிய தொழில் தொடங்கிய சன்னி லியோனுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *