சுந்தர் சியின் தலைநகரம் 2 எப்படி இருக்கிறது? : விமர்சனம்!

சுந்தர் சியின் தலைநகரம் 2 எப்படி இருக்கிறது? : விமர்சனம்!
  • PublishedJune 12, 2023

கடந்த 2006 ஆம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் உருவான திரைப்படம்தான் தலைநகரம். த்ரிலர், காமடி என மசாலா படங்களுக்கு பெயர் போன சுந்தர் சிக்கு தலைநகரம் படம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.

இந்நிலையில், தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தலைநகரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்சி எடுத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இதில்,  மீண்டும் ஃபார்முக்கு வர போராடும் ரவுடி ரைட்டாக சுந்தர்சியில் நடித்திருக்கிறார். வன்முறை,  ஒரு நடிகையின் திடீர் மாயம் என இந்த கதை நகர்வது போல் டிரைலரில் காட்டப்பட்டிருக்கிறது.

தலைநகரம் 2 என்றதும் மீண்டும் நாய் சேகரின் காமெடி காட்சிகள் இருக்குமா என்று நினைத்தவர்களுக்கு இந்த ட்ரெய்லர் கொஞ்சம் ஏமாற்றம்தான். ஒரு வேலை இனிவரும் அப்டேட்டுகளில் அது பற்றி தெரிய வாய்ப்பிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *