எனக்கு நான்கு காதலிகள் இருக்கிறார்கள் – ஓபனாக பேசிய இயக்குனர்!

எனக்கு நான்கு காதலிகள் இருக்கிறார்கள் – ஓபனாக பேசிய இயக்குனர்!
  • PublishedMay 12, 2023

இயக்குனர் இமயம் பாரதிராஜா மண் மணம் மாறாத கிராமத்து கதைகளை எடுக்கக் கூடியவர். அவருடைய படங்களில் முன்னுக்குப் பின் முரணாக எந்த விஷயங்களையும் வைக்க மாட்டார்.

இப்போது அவரே மாடர்ன் லவ் என்ற ஆந்தலாஜி தொடரை இயக்கியுள்ளார். அதாவது ஆறு ஆந்தாலஜி தொடராக மாடல் லவ் சென்னை உருவாகியுள்ளது.

இந்தத் தொடர் ஹிந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இப்போது தமிழில் உருவாகியுள்ளது. மேலும் வருகின்ற மே 18ஆம் திகதி  அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் பாரதிராஜா இந்த தொடரின் விழாவில் பேசிய போது   தனக்கு இப்போது 84 வயதானாலும் இதுவரை காதல் செய்வதாக கூறியுள்ளார். மாடல் லவ்வை போல தனது வாழ்க்கையிலும் நிறைய காதலி உள்ளதாக கூறி உள்ளார்.

அதாவது தான் ஒன்பதாவது படிக்கும்போது முதல்முறையாக காதல் செய்தேன் என்றும்,  அதன் பிறகு சென்னை வந்ததற்கு பிறகு மற்றொரு காதல் மலர்ந்தது. அப்படி காலம் மாற்றத்திற்கு ஏற்ப இதுவரை நான்கு காதல் செய்துள்ளேன் என வெளிப்படையாக பாரதிராஜா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *