எனக்கு விஜய் சேதுபதியை பிடிக்கும் : ஷாருக்கானின் கருத்தால் குஷியில் ரசிகர்கள்!

எனக்கு விஜய் சேதுபதியை பிடிக்கும் : ஷாருக்கானின் கருத்தால் குஷியில்   ரசிகர்கள்!
  • PublishedJune 14, 2023

பிரபல பொலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் டுவிட்டரில் தன் இரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இதன்போது ரசிகர்களின் வேடிக்கையான கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.

அவருடைய உரையால் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரசிகர் ஒரு உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ஷாருக்கான்,  ‘விக்ரம்’ மற்றும் ’96’ ஸ்டார் விஜய் சேதுபதி தனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர்  என்று பதிலளித்துள்ளார்.  அத்துடன் ஜவானில் அவர் மிகவும் அருமையாக இருக்கிறார்” என்றும் அவர் கூறினார்.

அதேபோல் மற்றுமோர் ரசிகர் ஷாருக்கானின் அன்றைய பின்நேர  திட்டத்தை பற்றி கேள்வி எழுப்ப அதற்கு பதிலளித்த அவர், அட்லியுடன் ஜவான் படம் பார்க்கலாம் என்று நினைத்ததாக கூறியுள்ளார்.

மற்றொரு பயனர் ஷாருக்கானிடம் ‘டன்கி’ அல்லது ‘ஜவான்’ எது உடல் ரீதியாக மிகவும் சவாலானதாகக் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், “”ஜவான்” நிச்சயம் நிறைய ஆக்ஷன் இருக்கும்” என்று திட்டவட்டமான பதிலை அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *