தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன் : முதல் முறையாக மனம் திறந்த குஷ்பு!

தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன் : முதல் முறையாக மனம் திறந்த குஷ்பு!
  • PublishedMarch 30, 2023

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு  சிறு வயதில் தனது தந்தையால் தனக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் வெளிவருவது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி பேசிய அவர் ‘என் மீது நிறைய பொறுப்புகள் இருந்தன அது என்னைப் பேச அனுமதிக்கவில்லை.

நான் அதைப் பற்றி யாரிடமும் சொல்லவும் இல்லை. என் குடும்பம்- என் அம்மா மற்றும் மூன்று சகோதரர்கள் என அவர்கள் அனைவரும் எனக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாதவர்கள்.

என் அம்மா குடும்ப வன்முறைக்கு ஆளானதை நான் கண்டேன். இதைப் பற்றி யாரிடமாவது பேசினால், என் அம்மாவும்,  சகோதரர்களும் கடுமையாகப் பழிவாங்கப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டேன். அந்த பயம் என்னை பேசவிடாமல் தடுத்தது.

ஆனால் இது நிறுத்தப்பட வேண்டும் என்று நினைக்கும் நேரம் எப்போதும் வெகு தூரம் இருக்காது’ என குஷ்பு தெரிவித்தார். தனது தந்தைக்கு எதிராக தான் போராட தொடங்கியபோது தன் குடும்பத்தை அவர் விட்டுச்சென்று விட்டதாக குஷ்பு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *