பத்து தல பார்க்க ஹெலிகாப்டருடன் வந்து மாஸ் செய்த கூல் சுரேஷ்

பத்து தல பார்க்க ஹெலிகாப்டருடன் வந்து மாஸ் செய்த கூல் சுரேஷ்
  • PublishedMarch 30, 2023

சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் பத்து தல படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு அவரது தீவிர ரசிகரான கூல் சுரேஷ் ஹெலிகாப்டருடன் வந்தார். மாநாடு படம் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். மாநாடு படம் போலவே வெந்து தணிந்தது காடும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனால் சிலம்பரசன் படு உற்சாகத்துடன் காணப்பட்டார்.

அதே உற்சாகத்துடன் சில்லுனு ஒரு காதல் இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடிக்க கமிட்டானார் சிம்பு. சிவராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

பத்து தல படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. துணிவு, வாரிசு படங்களுக்கு நடந்ததுபோலவே அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்ட முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிடப்பட்டது. இருந்தாலும் முதல் காட்சியை பார்த்துவிட சிம்பு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்துள்ளனர். முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படத்தை ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். ஏஜிஆர் ராவணன் கதாபாத்திரத்தில் சிம்பு அட்டகாசம் செய்திருப்பதாகவும் தெரிவித்துவருகின்றனர்.

ஹெலிகாப்டருடன் வந்த கூல் சுரேஷ்

இதற்கிடையே நடிகர் சிம்புவின் தீவிர ரசிகராக இருப்பவர் நடிகர் கூல் சுரேஷ். வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து சிம்புவின் படங்களுக்கு தீவிரமாக ப்ரோமோஷன் செய்துவருபவர். அவரது பேச்சு ரசிக்கும்படியாக இருந்தாலும் சில சமயங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகக்கூடியவை. ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அவர் சிம்புவின் படங்களுக்கு ப்ரோமோஷன் செய்வதையே தனது மூச்சாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இன்று வெளியாகும் பத்து தல படத்துக்கு ஹெலிகாப்டரில் வருவேன் என கூல் சுரேஷ் அறிவித்திருந்தார். எனவே அவர் ஹெலிகாப்டரில் வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருந்தது. இன்று முதல் நாள் முதல் காட்சிக்கு வந்த அவர் கையில் பொம்மை ஹெலிகாப்டரை வைத்தபடி வந்திருந்தார். இதனைக் கண்ட ரசிகர்கள் சிரிப்பதா இல்லை கோபப்படுவதா என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர்.

முன்னதாக, சில நாள்களுக்கு முன்பு தனியார் ஊடகம் ஒன்றுக்கு கடலில் சென்றபடி பேட்டி அளித்தார் கூல் சுரேஷ். அப்போது சிம்புவை வைத்து நீங்கள் ஆதாயம் தேடுகிறீர்கள் என பலர் கூறுகிறார்களே என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு கோபப்பட்ட கூல் சுரேஷ், இப்படியெல்லாம் பேசாதீங்க என சொல்லியபடி படகிலிருந்து கடலில் குதித்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *