உலகளவில் இட்லி கடை செய்துள்ள வசூல் விபரம்

உலகளவில் இட்லி கடை செய்துள்ள வசூல் விபரம்
  • PublishedOctober 10, 2025

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை படம் உலகளவில் இதுவரை ரூ. 62 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், ராஜ்கிரண், பார்த்திபன், கீதா கைலாசம், சத்யராஜ் என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

குடும்ப பாங்காக எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இதுவரை 9 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

இந்த நிலையில், 9 நாட்களில் உலகளவில் இட்லி கடை ரூ. 62 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *