மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா ஜோடி

மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா ஜோடி
  • PublishedOctober 10, 2025

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப் படத்தில் தெலுங்கு நடிகையான ஸ்ரீலீலா கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

தற்போது ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் சிவா.

இதையடுத்து, ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும், இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பதாகவும் அண்மையில் தகவல் வெளியானது.

இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், சில காரணங்களால் அவர் திடீரென படத்தில் இருந்து விலகுவதாகத் தெரிவித்ததால், ஸ்ரீலீலாவின் பெயரை சிவகார்த்திகேயன் பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே பராசக்தி படத்தில் சிவாவும் ஸ்ரீலீலாவும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *