மகளைப் பார்க்க வைத்தியசாலை விரைந்தார் இளையராஜா… இலங்கைக்கு படையெடுக்கும் உறவுகள்

மகளைப் பார்க்க வைத்தியசாலை விரைந்தார் இளையராஜா… இலங்கைக்கு படையெடுக்கும் உறவுகள்
  • PublishedJanuary 25, 2024

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவரது உடல் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் உள்ள இசைஞானி இளையராஜா குறித்த வைத்தியசாலைக்கு சென்று நிலைமையை நேரில் சென்று பார்த்தார்.

இதற்கிடையில் யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்ட பவதாரிணியின் குடும்ப உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பவதாரிணியின் உடல் நாளை இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பவதாரிணியின் மறைவுக்கு பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *