ஹீரோவும் நானே.. வில்லனும் நானே.. தாறுமாறு பண்ணும் சிம்பு..

ஹீரோவும் நானே.. வில்லனும் நானே.. தாறுமாறு பண்ணும் சிம்பு..
  • PublishedFebruary 2, 2024

நடிகர் சிம்பு பிப்ரவரி 3ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவரது நடிப்பில் உருவாக் வரும் எஸ்டிஆர் 48 படத்தின் வெறித்தனமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.

கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு கமல்ஹாசன் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பாகுபலி படத்திற்கு இந்திய சினிமாவே வரலாறு தொடர்பாகவும் போர் வீரர்களை மையப்படுத்திய பிரம்மாண்ட படங்கள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எத்தனை கோடி பட்ஜெட்டில் உருவானாலும் அந்த படங்களை பார்க்க ரசிகர்கள் தியேட்டரை நோக்கி வருகின்றனர் என்பதால் பலரும் அந்த ஜானர் படங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் சிம்பு நெகட்டிவ் ரோலில் நடித்தால் படம் பட்டையை கிளப்பும் எஸ்டிஆர் 48 படத்தில் யார் வில்லன் என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், சிம்பு தான் வில்லனாக இருப்பார் என யூகித்து இருந்தோம். தற்போது சிம்பு இரட்டை வேடங்களில் எதிரும் புதிருமாக இருக்கும் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் டி. ராஜேந்தரின் மகனான சிம்பு சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். தனது 41வது பிறந்தநாளை நாளை கொண்டாட உள்ள நிலையில், அவரது ரசிகர்களுக்கு எஸ்டிஆர் 48 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. ஆனால், படத்தின் டைட்டிலை அறிவிக்காமல் சற்றே ஏமாற்றி விட்டனர். விரைவில் படப்பிடிப்பு நிறைவடையும் வேளையில் படத்தின் தலைப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *