போட்றா வெடிய.. அண்ணே வந்துட்டார்… தமிழ்நாடு முழுக்க நடுரோட்டில் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

போட்றா வெடிய..  அண்ணே வந்துட்டார்… தமிழ்நாடு முழுக்க நடுரோட்டில் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
  • PublishedFebruary 2, 2024

விஜய் மக்கள் இயக்கம் என இயங்கி வந்த ரசிகர் மன்றத்தை இனிமேல் தமிழ்நாடு வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் விஜய்.

அந்த அறிவிப்பு வெளியானதுமே குஷியான விஜய் மக்கள் இயக்கத்தினர் சாலைகளில் சரவெடி பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரப் போகிறார் என்கிற தகவல்கள் சில ஆண்டுகள் முன்பே வெளியானது. மேலும், வெள்ள நிவாரண உதவிகளை நேரடியாக நெல்லைக்கு வந்து செய்த போதே விஜய் தீவிர அரசியலில் களம் காண போகிறார் என்றனர்.

தொடர்ந்து அரசியல் மீது ஆர்வத்தை செலுத்தி வந்த நடிகர் விஜய் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அட்லீ படத்தில் இடம்பெற்ற பாடலில் விஜய் வெறித்தனமாக ஆடியிருப்பார். எம்ஜிஆர் பாணியில் மக்களுக்கான அரசியல் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு ஹீரோ ஆட்சியை பிடிக்க முடியும் என்கிற நம்பிக்கையில் அரசியலில் அடியெடுத்த வைக்க உள்ளார் விஜய்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் சாலைகளில் தற்போது பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். வாகனங்களில் செல்பவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என அறிவித்த விஜய் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பெரும் பலத்துடன் போட்டியிட தீவிரம் காட்டி வருகிறார். இந்த ஆண்டு விஜய் இரண்டு படங்களில் நடித்து விடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக ஆக்‌ஷன், நடனம், காமெடி என கவர்ந்து வந்த நடிகர் விஜய் திடீரென சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்து இருப்பதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு படங்களை தான் இனிமேல் தியேட்டருக்குச் சென்று பார்க்க வேண்டுமா? என்று ஃபீல் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *